காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க நடுவண் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தியுள்ளனர். - Agnipuratchi

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்க நடுவண் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தியுள்ளனர்.

Share This

காவிரி ஆணையத்தின் முதல் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. 4 மாநில பிரதிநிதிகளுடன் நடுவண் அரசு நியமித்த உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஜூலை மாதத்திற்கு காவிரி நீரை பங்கிடுவது  குறித்து இதில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நடுவண் பா.ஜ.க அமைச்சர்களும் பங்கேற்றதால் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கர்நாடகா முட்டுக்கட்டை போடுவதற்கு காவிரிப்பாசன விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர நடுவண் மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுதினர். 

இதனிடையே கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட 25ஆயிரம் கனஅடி உபரி நீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் 58 அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages