ஆக்கிரமிப்புகளை தடுக்கத் தவறிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ஏன் கலைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக வினவியுள்ளது. - Agnipuratchi

ஆக்கிரமிப்புகளை தடுக்கத் தவறிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை ஏன் கலைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக வினவியுள்ளது.

Share This

ஆக்கிரமிப்பு கட்டடத்தை அகற்றக்கோரும் வழக்கு ஒன்று, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். நேற்று முன்நாள் ஒரு நாள் பெய்த மழைக்கே தாங்க முடியாமல் சென்னை தவித்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.  

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவள்ளத்துக்குப் பிறகும் மாநகராட்சியும், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமமும் பாடம் கற்கவில்லையா என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். ஆக்கிரமிப்பாளர்களிம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளார்களா எனவும் நீதிபதிகள் வினவினர். சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே நிறைவேறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை தடுக்காத வளர்ச்சிக்குழுமத்தை ஏன் கலைக்கக் கூடாது என காட்டமாக கேள்வி எழுப்பினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமாமான பணியாளர்கள் உள்ளார்களா?  மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் எத்தனை எனவும் நீதிபதிகள் கேட்டனர். இது தொடர்பாக வரும் 17 ஆம் தேதிக்குள் மாநராட்சி ஆணையர் நேரில் முன்னிலையாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆணையிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages