கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. - Agnipuratchi

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This

கோவை நரசிபுத்தில் இயங்கிவரும் தனியார் அறிவியல் கலைக் கல்லூரியில், நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. அப்போது லோகேஸ்வரி என்ற மாணவியை  கல்லூரி கட்டடத்தின் 2வது மாடியிலிருந்து குதிக்குமாறு பயிற்சியாளர் அறிவுறுத்தினார். அச்சத்தால் கீழே குதிக்க மாணவி தயங்கியபோதும் பயிற்சியாளர் ஆறுமுகம் வலுக்கட்டாயமாக தள்ளினார். லோகேஸ்வரியை பிடிப்பதற்காக சகமாணவிகள் காத்திருந்தனர். எனினும் 2 வது மாடியிலிருந்து குதித்த லோகேஸ்வரி முதல் தளத்தின் ஸ்லாப் எனப்படும் முகப்பின் மீது தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட லோகேஸ்வரி வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages