பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளுடன் அது குறித்த வியூகம் வகுக்கவும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது தொடர்பான உத்திகள் குறித்தும் ஆலோசிக்க இன்று சென்னை வந்துள்ளார். இதற்காக விமான நிலையம் வந்த அவருக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதரராவ், இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து வி.ஜி.பி. கோல்டன் பீச்சுக்கு சென்ற அவர், பா.ஜ.க.வின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கொள்கை தயாரிப்புக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். . பா.ஜ.க வின் உயர்மட்ட நிர்வாகக்குழுக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ள அமித்ஷா, கூட்டணிக் கட்சியினருடன் சந்திப்பு உட்பட இரவு 10 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா-நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா-நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment