சேலம் - பசுமைவழிச்சாலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - Agnipuratchi

சேலம் - பசுமைவழிச்சாலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Share This

சென்னை-சேலம் பசுமைவழிச்சாலை மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்றும், வேண்டுமென்றே சிலர் இந்த திட்டத்தை முடக்க நினைப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். சட்டப்பேரவையில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பசுமைவழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் என்றும், 8 வழிச்சாலையை மாற்றுப் பாதையில் செயல்படுத்த நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "நாட்டிலேயே அதிக போராட்டம் நடைபெறுவது தமிழகத்தில் தான், கருத்து சொல்ல முழு சுதந்திரம் தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும் பேசிய அவர் கூறுகையில் எட்டுவழிச் சாலை திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அமையவுள்ளது, முழுக்க முழுக்க மேற்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. பல்வேறு நவீன வசதிகளுடன் அமையவுள்ள இந்த சாலைத் திட்டம் கேரள மாநிலத்துக்கும் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மேலும், எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages