வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறவில்லை - Agnipuratchi

வேலூர் கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறவில்லை

Share This

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இட ஒதுக்கீடு விவரங்கள் எதுவும் பட்டியலில் இடம்பெறவில்லை. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் நேற்று தொடங்கியது. முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் அனைவரும் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். மற்ற பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று சென்னை, ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தொடங்கியது. கலந்தாய்வினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். ஆனால் அதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி இடஒதுக்கீட்டிற்கான விவரம் மட்டும் இடம்பெறவில்லை. பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கிய நிலையில் இடஒதுக்கீடு குறித்து அரசாங்கத்தில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages