இணையத் தகவல்கள் சேகரிப்பு மூலம் பொதுமக்களை கண்காணிப்பின் கீழ் நடுவணரசு கொண்டு வருகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் பொது மக்கள் பகிரும் தகவல்களை சேகரித்து ஆய்வு செய்வதற்காக சமூக ஊடக நடு வம் ஒன்றை உருவாக்க நடுவணரசு திட்டமிட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர், நடுவணரசு திட்டமி ட்டுள்ள சமூக ஊடக நடுவத்தின் கண்காணிப்புப் பணிகளுக்காக மென்பொருள் ஒன்றை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி திறக்கப்படவிருப்பதாகவும் கூறினார். இது குறித்து நடுவணரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்ட நீதிபதிகள், சமூக ஊடகத் தகவல்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பொதுமக்களை கண்காணிப்பின் கீழ் நடுவணரசு கொண்டு வருகிறதா என கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் நடுவணரசின் தலைமை வழக்குரைஞரோ அல்லது ஒரு சட்ட அதிகாரியோ நீதிம ன்றத்துக்கு உதவ வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
No comments:
Post a Comment