டுவிட்டர் நிறுவனத்தின் சீரமைப்பு நடவடிக்கையால் ஒரே நாளில் பிரதமர் மோடி மூன்று லட்சம் ஆதரவாளர்களை இழந்துள்ளார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் பிரதமர் மோடியை ஏறத்தாழ நான்கரை கோடி பேர் பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் மூன்றாம் இடமா கும். இந்நிலையில் போலியான கணக்குகள் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிடுவோரின் கணக்குகளை முடக்கும் களையெடுப்பு நடவடிக் கைகளை டுவிட்டர் நிறுவனம் மேற்கொண்டது. இதன் விளைவாக உலகம் முழுவ தும் பல்வேறு முக்கியத் தலைவர்கள் ஆயிரக்கணக்கான டுவிட்டர் அபிமானி களை இழந்துள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கை பின்தொடருவோரின் எண்ணிக்கை ஒரே நாளில் மூன்று லட்சம் குறைந்துள்ளது. அவை அனைத்தும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல ராகுல்காந்தியை பின்தொடர்வோர் எண்ணிக்கையிலும் 17 ஆயிரம் குறைந்துள்ளது. டுவிட்டர் வலைதளத்தில் பிரபலமாக உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அமைச்சர் சசிதரூர் ஆகியோரின் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கையும் கணிசசமாக குறை ந்துள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் டுவிட்டர் சமூக வலைத்தளத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் 77 லட்சம் குறைந்திருப்பதாக அந்த நிறுவ னம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment