விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்கம் -லண்டன் நீதிமன்றம் - Agnipuratchi

விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்கள் முடக்கம் -லண்டன் நீதிமன்றம்

Share This

வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து நீதிமன்றத்தின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages