நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உத்தரவு-கரூர் நீதிமன்றம் - Agnipuratchi

நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உத்தரவு-கரூர் நீதிமன்றம்

Share This

பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதையடுத்து, பல்வேறு எதிர்ப்புகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். 
ஆனால் நேற்று எஸ்.வி.சேகர் கோர்ட்டுக்கு வரவில்லை. அவருக்கு பதில் அவரது வக்கீல் செந்தில்குமார் வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, வருகிற 20-ந் தேதி எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages