துப்பாக்கி சூடு குறித்து மனித நேய ஆணையம் உத்தரவு - Agnipuratchi

துப்பாக்கி சூடு குறித்து மனித நேய ஆணையம் உத்தரவு

Share This


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி அமைத்து தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்கு எதிராக வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு குறித்து தேசிய மனித உரிமை ஆணையமே மனுதாரருக்கு இறுதி உத்தரவை பிறக்க வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதனையடுத்து, மனித நேய ஆணையம், "துப்பாக்கி சூடு சம்பவத்தில் அதிக விதிமீறல்கள் நடந்துள்ளதால், இதன் விசாரணை 1 நீதிபதி அமர்வில் இருந்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றி அமைக்கப்படுகிறது. இது குறித்த விசாரணை இந்த மாதத்திற்குள்ளவே மேற்கொள்ளப்பட்டு, விரைவில் கூடுதல் ஆவணங்களை தமிழக அரசு ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages