கருணாநிதியை பார்க்க இன்று மாலை 4.18 மணிக்கு காவிரி மருத்துவமனைக்கு ராகுல் காந்தி வந்தடைந்தார். திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தேன்-ராகுல்.அவரது உடல் நிலை சீராக உள்ளது. கலைஞர் மிகவும் உறுதியானவர்.
தமிழ்நாட்டு மக்களுக்கு மிக உத்வேகமாக இருப்பவர் கருணாநிதி.காங்கிரஸ் கட்சிக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் நீண்ட கால நட்பு உண்டு.
முன்னதாக 3.30 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானத்தில் வந்திறங்கினார். காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் அவருடன் வருகை தந்தார். விமான நிலையத்தில் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களை வரவேற்றனர். கொட்டும மழைக்கு நடுவே காவிரி மருத்துவமனை வெளியே, காங்கிரஸ், திமுக தொண்டர்கள், வாழ்த்து கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள்.
No comments:
Post a Comment