ஊழலில் திளைக்கும் எடப்பாடி ஆட்சி நீடிக்கும் வரை தமிழகம் தொழில்துறையில் முன்னேற முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆண்டுக்கு 30 விழுக்காடு வீதம் அதிகரிக்கும் தமிழகத்தின் கடன் சுமையை சரிசெய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் கையூட்டு வாங்கி குவிப்பதிலேயே தீவிரம் காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவண ரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை 2017-ஆம் ஆண்டிற்கான தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலை நேற்று வெளி யிட்டதை குறிப்பிட்டுள்ளார். அதில், இந்தியாவில் தொழில் மற்றும் வணிகம் செய் வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 15-ஆவது இடத்தைப் பிடித்திருப் பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தின் இந்த பின்னடைவு கவலை அளி ப்பதாக கூறியுள்ள மருத்துவர் ராமதாஸ், இந்தப் பட்டியலில் வழக்கம் போலவே ஆந்திரப் பிரதேசம் முதலிடமும், தெலுங்கானா இரண்டாவது இடத்தையும் பிடித்திருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
இதற்கு முன் 2015-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் 12-ஆவது இடத்திலிருந்த தமிழ்நாடு, 2016-ஆம் ஆண்டு ஏற்பட்ட சரிவிலிருந்து இன்று வரை மீண்டு வர முடியவில்லை. இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு அதிகமுள்ள மாநிலங் களில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநி லங்கள் பட்டியலிலும் அதே இடத்தில் இருந்தால் மட்டுமே தொழில்துறை முன்னே ற்றத்தை தக்க வைத்து கொள்ள முடியும். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந் திராவும், தெலுங்கானாவும்தான் தமிழககத்திற்கு கடுமையான போட்டியை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு வந்தி ருக்க வேண்டிய 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஊர்தி உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே இதுதான் நிலை எனும் போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய் வதே சரியான நடவடிக்கையாக இருக்கும். ஆனால், தொழில் தொடங்க அனுமதி ப்பதற்காக கையூட்டு வாங்குவதை பினாமி ஆட்சியாளர்கள் கைவிட மாட்டார்கள் என்பதால்தான், தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்கள் கூட ஆட்சியாளர் களுக்கு கையூட்டு கொடுக்கத் தயங்கி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு செல்கின்றனர். தொழிற்துறை பின்னடைவால் தமிழகத்தில் வேலையில்லாத் திண் டாட்டம் அதிகரித்திருப்பதுடன், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறைந் திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டின் கடன் சுமை ஆண்டுக்கு 29 புள்ளி 85 விழு க்காடு வீதம் அதிகரித்து வருகிறது. இச்சிக்கலை சரி செய்ய வேண்டிய ஆட்சியா ளர்கள் கையூட்டு வாங்கிக் குவிப்பதில் மட்டுமே தீவிரம் காட்டுகின்றனர். அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியாத வரை தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியடையப் போவதில்லை. பினாமி ஆட்சி நீடிக்கும் வரை அரசு நிர்வாகத்தில் ஊழல் ஒழியப் போவதில்லை. எனினும், வெகு விரைவில் பினாமி ஆட்சி அகற்றப்படும்; அதன் பின்னர் அமையும் ஆட்சியில் முதலீட்டை ஈர்க்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகும் என மருத்துவர் ராமதாஸ் தெரி வித்துள்ளார்.
No comments:
Post a Comment