சத்துணவு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனம் ஆயிரத்து 350 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்றதில் முறைகேடு மற்றும் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு ஆகிய புகார்களில், கிறிஸ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வுகளை நடத்தினர். அந்த நிறுவனத்தின் தலைவர் குமாரசாமியையும் கைது செய்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். சென்னை, கோவை, சேலம், திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதுடன் கோடிக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிரடி ஆய்வுகளில் சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், கடந்த பத்து ஆண்டுகளில் கிறிஸ்டி ஃபிரைடுகிராம் நிறுவனம் ஆயிரத்து 350 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்திருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலி நிறுவனங்களின் பெயர்களில் அந்த நிறுவனம் சத்துணவுப் பொருட்களை விநியோகம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment