தென்மேற்குப் பருவமழையால்  தமிழகத்தில் நிரம்பும் அணைகள் - Agnipuratchi

தென்மேற்குப் பருவமழையால்  தமிழகத்தில் நிரம்பும் அணைகள்

Share This

தென்மேற்குப் பருவமழையால் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.


கர்நாடகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் கிடுகிடுவென நிரம்பிவருகின்றன. கபினி அணையிலிருந்து அதிக அளவில் உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. நொடிக்கு 45 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் ஒகேனக்கலில் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3 புள்ளி இரண்டு ஏழு அடி அதிகரித்து, நீர் மட்டம் 69 அடியை நெருங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நேற்று முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் பந்தலூர் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரிடர் ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது


கனமழை காரணமாக பில்லூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி 4 மதகுகள் மூலமும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி ஆற்றில் வௌ¢ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோலையாறு அணை நிரம்பியதால் 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல, அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்குமேல் அதிகரித்து 60 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து நொடிக்கு மூவாயிரத்து 321 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 123 அடியாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages