பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 29 ஆண்டுள் நிறைவு செய்து 30 ஆம் ஆண்டு தொடக்க விழா ஆங்காங்கே கொடியேற்றி, இனிப்பு வழங்கி, மாலை பொதுக்கூட்டம் நடத்தி சிறப்பு சேர்க்க வேண்டுமென அறிவித்ததை ஏற்று 30ஆம் ஆண்டை சிறப்பாக தொடங்கிய, கொடியேற்றிய, பொதுக்கூட்டம் நடத்திய, அதற்காக உழைத்திட்ட அனைத்து பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள், வீரம் மிக்க இளம் சிங்கங்களான தம்பிகள் அனைவருக்கும் நன்றி ! நன்றி! என நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுதழையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி சாதாரண கட்சியல்ல. உயர்ந்த கொள்கைகள், உன்னதமான இலட்சியங்கள், தொலைநோக்குப் பார்வை, மண், மக்கள், மொழி காக்கும் உயரிய செயல் திட்டங்கள் உள்ளடக்கி சமூகநீதிக்காவலர் மருத்துவர் மருத்துவர் அய்யா அவர்களால் தொடங்கப்பட்டு நமது பறுப்பாளர்களின் கடின உழைப்பால், ஈடு இணையற்ற அர்ப்பணிப்பால் வளர்த்ததடுக்கப்பட்ட மாபெரும் இயக்கம்தான் பா.ம.க. காவல் துறையில் தடியடிப்பட்டு, இரத்தம் சிந்தி. காயத்தழும்புகள் வடுக்களாக தாங்கி பல முறை சிறைச்சென்று கொடுமைகளையெல்லாம் சுமந்து, உயிர்த்தியாகம் செய்து வளர்த்த வரலாறு பா.ம.கவுக்கு உண்டு. போராட்டமே வாழ்க்கை, மாநாடுகள், பேரணிகள், கருத்தரங்குகள் நடத்துவதே தினசரி நடவடிக்கை என கடந்து வந்த பாதை கரடு முரடானது, மகத்தான வரலாறு கொண்டது. பா.ம.க நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளாண் அல்ல. பா.ம.க பல்வேறு சோதனைகளை ,நெருக்கடிகளை, கொடுமைகளை கடந்து வந்த மாபெரும் இயக்கம். ஆட்சியாளர்களால் அடக்கு முறைக்கும்,சிதைக்க நினைத்த முயற்சிக்கும் எதிர்த்து நின்று, உறுதியோடு முறியடித்து, தொடர்ந்து முன்னேறி வரும் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி. முதலிடத்திற்கு செல்லும் கட்சி.
மத்தியிலும், மாநிலத்திலும் குறிப்பாக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றித்திலும் பல சாதனைகள் படைத்திட்ட, புதிய சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றி மக்களை மேம்படுத்த உழைத்துவரும் உன்னதமான இயக்கம் பா.ம.க.
" இதனை இதனால் இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் " எனும் முதுமொழிக்கேற்ப சின்ன அய்யா அன்புமணி அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாளை ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, மருத்துவர் அன்புமணி முதலமைச்சர் உறுதி என்று நாளும் வளர்ந்துவரும் இயக்கம்.
உழைப்போம் ! வெற்றி பெறுவோம்!
நன்றி ! நன்றி! பாராட்டுக்கள்!வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment