தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த தடை - Agnipuratchi

தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த தடை

Share This

தனியார் பள்ளிகளில் வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட், ஐஐடி, ஜெஇஇ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகளை அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில், பள்ளி நேரத்தில் வர்த்தக நோக்கத்துடன் செயல்படும் பயிற்சி மையங்கள், பள்ளி வளாகத்திற்குள் நீட், ஐஐடி, ஜெஇஇ., ஆகிய நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த ஒரு பயிற்சி வகுப்பிலும் சேருமாறு மாணவர்களை பள்ளி நிர்வாகம் வற்புறுத்தக் கூடாது எனவும், பள்ளி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்திருப்பதை விட எந்த விதத்திலும் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேல்நிலை வகுப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவு மற்றும் பாடத்திட்டங்களைத் தவிர வேறு எதனையும் கற்பிக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages