தமிழக சட்டப்பேரவை-லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது - Agnipuratchi

தமிழக சட்டப்பேரவை-லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது

Share This

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் காலக்கெடு நாளையுடன் முடிவதால் இன்று சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. திமுக வெளிநடப்பு செய்த நிலையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. பீகார், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஆந்திராவை தொடர்ந்து தமிழகத்திலும் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய முழுவதும் மொத்தம் 17 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த லோக் ஆயுக்தா முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டது. மத்திய அரசு சட்டப்படி மாநில அரசுகள் லோக் ஆயுக்தா வழிவகை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages