சென்னையில் விற்கப்படும் மீன்களில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் - Agnipuratchi

சென்னையில் விற்கப்படும் மீன்களில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்

Share This

சென்னையில் விற்கப்படும் மீன்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஃபார்மலின் வேதிப்பொருள் கலந்து விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக முக்கிய மீன் விற்பனை சந்தைகளான சிந்தாதிரிபேட்டை, காசி மேட்டில் வாங்கப்பட்ட 30 வகையான முக்கிய மீன் வகைகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 11 மாதரிகளில் ஃபார்மலின் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீன்களை ஏற்றுமதி செய்யும் இடைத்தரகர்களே காரணம் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீன்களில் வேதிப்பொருள் கலப்பது தெரிய வந்துள்ளதால் மீன்களின் வியாபாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, மீன்களில் வேதிப்பொருட்களை சேர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages