விழுப்புரம் மாவட்டம் சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க கோரிய வழக்கில், தமிழக அரசு 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைக்குட்பட்டு ஓடும் சங்கராபரணி ஆற்றில் நாள்தோறும் 500 மாட்டு வண்டிகள் மூலமாகவும், லாரிகளிலும் மணல் கடத்தப்படுவதாக ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டது. இந்த விசாரணையினையடுத்து நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில் சில விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் வகுத்த எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படாமல், அரசு அதிகாரிகள் உதவியுடன் மணல் கடத்தப்படுவதாக, தற்போது மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த மனு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டுமென்றும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோரும் 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சங்கராபரணி ஆற்று மணல் கடத்தல்-தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment