கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை கைது செய்ததன் ஓராண்டு நிறைவு நாளை கருப்பு நாளாக அப்பகுதி மக்கள் கடைபிடித்தனர்.
கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து ஓ.என்.ஜி.சி. செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி இந்நிறுவனத்தின் குழாயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடியவர்களை காவல்துறை கைது செய்தது. அதன் ஓராண்டு நிறைவு நாளை கருப்பு நாளாக கதிராமங்கலம் மக்கள் கடைபிடித்தனர்.
407வது நாளாக தொடரும் இந்த போராட்டம் ஓ.என்.ஜி.சி. வெளியேறும் வரை தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment