டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்-தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் - Agnipuratchi

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டம்-தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்

Share This

காவிரி மேலாண்மை வாரியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இந்த போராட்டத்தினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதோடு, ஒலி மாசுவும் ஏற்படுகிறது என்று கூறினார். மேலும், விவசாயிகளின் கூடாரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை ஆகியவற்றை உடனடியாக அகற்ற கூறி உத்தரவிட்டார். இதனால் அவர்களது போராட்டம் தடைப்பட்டது. இதனை எதிர்த்து பல தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று போராட்டத்திற்கான தடையினை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages