தமிழக ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின் - Agnipuratchi

தமிழக ஆளுநரை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்

Share This

அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை சிபிஐ விசாரிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், நாகராஜன் செய்யாதுரை தொடர்புடைய எஸ்பிகே குழும நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்ததை சுட்டி காண்பித்ததாக கூறினார். மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த மனுவினை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் கூறியதாக சொல்லிய அவர், ஒருவேளை அவர் தயங்கினால் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages