தாஜ்மகால் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு? - Agnipuratchi

தாஜ்மகால் பராமரிப்பு பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு?

Share This

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் பராமரிப்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், ‘நினைவுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை பராமரிக்கவும், விரிவுபடுத்தி பாதுகாக்கவும், தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் கொண்டு வரப்படும். இது, மத்திய சுற்றுலாத்துறையின் முக்கிய கொள்கைகளில் ஒன்று’ என்றார்.

மேலும், டெல்லியில் உள்ள செங்கோட்டை பகுதியை, தனியார் சிமெண்ட் நிறுவனம் பராமரித்து வருவதை மேற்கோள் காட்டிய கே.ஜே.அல்போன்ஸ், ‘‘இத்தாலி நாட்டில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான கொலோசியத்தை செருப்பு தயாரிக்கும் நிறுவனம் பராமரித்து வரும் நிலையில், தாஜ்மகாலை தனியாரிடம் ஒப்படைப்பதில் என்ன தவறு’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மத்திய அமைச்சரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வணிக நோக்கத்துடன் தனியாரிடம் ஒப்படைக்கும் இந்த திட்டத்துக்கு கண்டனங்களும் வலுத்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன், தாஜ்மகாலை பராமரிப்பதில் உத்தரப்பிரதேச அரசு முறையாக செயல்படவில்லை என்றும், தாஜ்மகாலை பராமரிப்பதற்கான எந்தவித திட்டமும் மாநில அரசிடம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர் கூறிய கருத்தால், தாஜ்மகால் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages