'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு-செங்கோட்டையன் - Agnipuratchi

'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு-செங்கோட்டையன்

Share This

நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், பள்ளியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அதுவே தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், இருப்பினும் நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு வசதியாக 422 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages