தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு மதுரை உயர்நீதிமன்றம் - Agnipuratchi

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு மதுரை உயர்நீதிமன்றம்

Share This

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி என தொடர்ப்பட்ட வழக்கில், தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்நிலையில் இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் கருணை மதிப்பெண்ணாக வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖. மேலும், ஒரு வாரத்தில் மருத்துவ படிப்புக்கான புதிய தரவரிசை பட்டியலை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், சிபிஎஸ்இக்கு சிக்கல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages