தமிழக பா.ஜ.,வில் இருப்பவர்கள் ‘ஜால்ராக்கள்’ புதிய தலைவர் கட்சிக்கு அவசியம் தேவை சுப்பரமணிய சாமி சென்னை பேட்டி - Agnipuratchi

தமிழக பா.ஜ.,வில் இருப்பவர்கள் ‘ஜால்ராக்கள்’ புதிய தலைவர் கட்சிக்கு அவசியம் தேவை சுப்பரமணிய சாமி சென்னை பேட்டி

Share This

தமிழகத்தில் பா.ஜ., இருக்கிறதா என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கேள்வி எழுப்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சுப்பிரமணிய சாமி  பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார். அதன் விவரம் வருமாறு:

கேள்வி: வரும் 2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., யாருடன் கைகோர்த்தால் பலனாக இருக்கும்?

பதில்: தமிழகத்தில் பா.ஜ., இருக்கிறதா? இங்கு செய்ல்படுவது கட்சி அல்ல. விருந்தோம்பல் மையம். அரசியல் ரீதியாக மற்ற தலைவர்களுக்கு சால்வை அணிவிப்பது,  அவர்களின் வீட்டுக்குச் செல்வது போன்ற செயல்பாடுகள் தான் நடக்கின்றன. கட்சி செய்லாபடு வேறு. விருந்தோம்பல் வேறு. இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

கேள்வி: தமிழக பா.ஜ., தலைவராக தற்போதுள்ள தலைவரே தொடர்வார் என தமிழகத்திற்கான மத்திய பார்வையாளர் முரளிதரராவ் விளக்கம் அளித்துள்ளாரே?

பதில்: தலைவரை மாற்றினாலும் பெரிய வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர் அப்படி சொல்லி இருக்கலாம். அப்படியே தலைவரை மாற்றினாலும் விருந்தே £ம்பல் மையத்திலிருந்து மற்றொரு ‘ஜால்ரா’தான் பதிவிக்கு வரப்போகிறார். எனவே வித்தியாசம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. விருந்தோம்பல் தொடரும்.

கேள்வி: அப்படியானால் கட்சியை எப்படித்தான் முன்னேற்றுவது?

பதில்: கட்சியில் யாரெல்லாம் செயல்படாமல் இருக்கிறார்களோ அல்லது அவர்களால் கட்சிக்கு எவ்வித பயனும் இல்லை என்றால் ப்படிப்பட்டவர்கள் உடனடியாக வெளியேற்ற  வேண்டும். தலைவர் பதவிக்கு மிகத் திறமையான நபர் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் இந்த விருந்தோம்பல் மையத்திலிருந்து தேர்வு செய்யக் கூடாது. அப்படி செய்தால்  மட்டுமே கட்சி வலுவடையும். அதோடு, இளைஞர்கள், பெண்கள் அதிக அளவில் கட்சியில் இணைத்து அதில் சிறந்தவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்க வேண்டும். நல்லவர்கள்  கட்சிக்கு வெளியே சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். கெட்டவர்கள் கட்சி பொறுப்பில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.

கேள்வி: உங்கள் சாய்ஸ் யார்? தற்போதைய தலைமை மீது அப்படி என்ன உங்களுக்கு வெறுப்பு?

பதில்: புதிய தலைவர் யார் என்பதை மத்திய பா.ஜ., தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு தெரியும். யார் வந்தால் நல்லது. யார் போனால் அதை விட  நல்லது என்று. ஜெயலலிதா மறைவு, கருணாநிதியால் செயல்பட முடியத நிலையில், தமிழகத்தில் இந்துத்துவத்திற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. இங்கு இந்து ஒற்றுமையை  உருவாக்கும் கட்சிக்குத் தான் எதிர்காலம் உள்ளது. தமிழக பா.ஜ., அதனைச் செய்ய முடியாது. காரணம் இங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ‘ஜால்ரா’ போடுகின்றனர்.      இந்துக்களுக்கு சாதகமாக இருக்கிறதோ, இல்லையோ எல்லாவற்றையும் தமிழக பா.ஜ., அறிக்கையாக வெளியிடுகின்றது. தேவை இல்லாத பேச்சுக்கள் அதிகம் இருக்கிறது.  மேலும் இந்துத்துவாவுக்காக தமிழக பா.ஜ.,வால் செயல்பட முடியாது.

கேள்வி: உங்களுக்கு அப்படியென்ன தமிழக பா.ஜ., மீது கோபம்?

பதில்: கோபம் இல்லை. விரக்திதான். மோடிய அரசின் திட்டங்களை தமிழக பா.ஜ., மக்களிடத்தில் எடுத்துச் சொல்லவில்லை. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு மத்திய  அரசின் எந்த ஒரு நலத் திட்டம் குறித்தும் தெரியாது. மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு கொண்டுவந்ததாக நினைக்கிறார்கள். தவிர, இங்குள்ள தலைமைக்கு மக்கள்  செல்வாக்கு இல்லாத தலைவர்களிடத்தில் சண்டை போடவே நேரம் சரியாக இருக்கிறது. தவிர, இந்துத்வா கோட்பாடுகளை கையில் எடுக்காமல் திராவிட கட்சிகளைப் போல்.  என்னை கேட்டால் தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.,வை திராவிட பா.ஜ., என சொன்னால் சிறப்பாக இருக்கும். 

கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு அடுத்த தேர்தலில் பலம் சேர்க்க ரஜினியுடன் இணைவது சரியாக இருக்குமா? அல்லது தி.மு.க.,வுடன் நெருங்க வேண்டுமா?

பதில்: ரஜினிகாந்த் என்கிற ஆள் ஒன்றுமே கிடையாது. அவரது மனைவியின் மானம் உச்ச நீதிமன்றத்தில் போய்விட்டது. இவர்தான் ஊழலை ஒழிக்கப் போகிறாரா? அவர்  வீட்டிலேயே ‘சிஸ்டம்’ சரியில்லை. கமல் ஒரு கோமாளி. தி.மு.க.,வைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியம். அந்த கட்சி குறித்து நான் பேச தேவை இல்லை.

கேள்வி: நிதித்துறை அமைச்சராக அருண் ஜெட்லி வகிக்க முடியாமல் போனபோது கூடுதல் பொறுப்பு பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது. உங்களுக்கு வழங்கப்படவில்லை  என உங்களின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தார்களே?

பதில்: என் மனப்பான்மையை அறிந்த என் ஆதரவாளர்களுக்கு வெறுப்பு இருக்காது. எது எனக்கு வரவேண்டுமோ அது கிடைக்கும். அதனால் எனக்கு அதுபற்றி  கவலையில்லை. எனக்கென்று சில பொறுப்பை பா.ஜ., மேலிடம் வழங்கி உள்ளது. அஐத சிறப்பாக செய்தாலே போதும்.

கேள்வி: மத்திய அமைச்சராக சுப்பிரமணியன் சுவாமியை எதிர்பார்க்கலாமா?

பதில்: சிரித்துக் கொண்டே... போதும். போதும்.

கேள்வி: வரும் 2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது தமிழகத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வைப்பார்கள் என ஒருசில தமிழக அரசியல் கட்சிகள் கூறுகின்றன.  உங்கள் கருத்து என்ன?

பதில்: அப்படி எனக்குத் தெரியவில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. அவ்வாறு செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.  ஆனால் பா,ஜ.,வுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடையாது. அதனால், மாற்றங்கள் கொண்டு வரும்போது தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான சதியா என மற்ற  கட்சிகள் கேள்வி எழுப்பும். நிறைய பிரச்னைகள் இருக்கிறது. 2024 தேர்தலில் வேண்டுமானால் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு சுப்பரமணிசாமி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages