தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய எஞ்சியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் துவங்கியது. - Agnipuratchi

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய எஞ்சியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் துவங்கியது.

Share This

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்க நேற்று உகந்த நாள் என மீட்பு படையினர் முடிவு செய்தனர்.  சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேரும் நல்ல மன வலிமையுடனும், உடல் வலிமையுடனும் காணப்பட்டதால் அவர்களை நேற்று மீட்க அதிரடியாய் திட்டமிட்டு, ‘டி-டே’ என பெயரிட்டு, அந்த பணிகளை உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கினர்._

சிறுவர்களையும், பயிற்சியாளரையும் மீட்பதற்காக 18 ‘டைவர்’கள் (முக்குளிப்பு வீரர்கள்) குகைக்குள் சென்றனர். நேற்று மொத்தம் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு விட்டனர்.

எஞ்சிய 8 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி, நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இரவு நேரம் என்பதாலும், பிராண வாயு நிரப்புதல் உள்ளிட்ட வேறு சில பணிகளுக்காகவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் குகைக்குள் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி துவங்கியது.

மீட்பு பணி முழுவதுமாக முடிய மூன்று முதல் நான்கு நாட்கள் வரை ஆகலாம் என்று சியாங் ராய் மாகாண கவர்னர் தெரிவித்தார். ராய்டர்ஸ், ஏ.எப்.பி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் மீட்பு பணி துவங்கியதாக செய்தி வெளியிட்டுள்ள போதிலும்,  மீட்பு பணி மீண்டும் துவங்கியதாக மீட்புக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages