ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க கூடுதல் வீரர்கள்-மத்திய அரசு - Agnipuratchi

ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க கூடுதல் வீரர்கள்-மத்திய அரசு

Share This

ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ராணுவத்துக்கு 55 ஆயிரம் பேரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ராணுவத்தின் வலிமையை அதிகரிக்கும் விதமாக ஆள் எடுப்பது, மேலும் வலுப்படுத்தும் விதமாக ஒரே நேரத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை தேர்வு செய்து ராணுவத்தில் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும். இதனையடுத்து, மொத்தம் 54,953 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 
இதில் ஆண்களுக்கான மொத்த காலி இடங்கள் 47,307 ஆகும். பெண்களுக்கு 7,656 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் அதிகபட்சமாக மத்திய ரிசர்வ் படைக்கு 21,566 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் முறையிலும் தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages