எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. சென்னை கொளப்பாக்கம் பள்ளி முற்றுகை - Agnipuratchi

எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. சென்னை கொளப்பாக்கம் பள்ளி முற்றுகை

Share This

சென்னை  கொளப்பாக்கத்தில் உள்ள ஒமேகா பள்ளியில் வேன் அட்டன்டர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

சென்னை கொளப்பாக்கத்தில் உள்ளது ஒமேகா பள்ளி. இங்கு மாணவர்களை பள்ளியிலிருந்து வீட்டுக்கும் வீட்டிலிருந்து பள்ளிக்கும் அழைத்து செல்ல வேன்கள் இயக்கப்படுகின்றன.

இந்த வேனில் குழந்தைகளை ஏற்றி இறக்க வேனுக்கு ஒரு அட்டன்டர் என உள்ளனர். இவர்கள் எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது அவர்களில் ஒருவன் கொளப்பாக்கதை சேர்ந்த பாஸ்கரன் என தெரியவந்துள்ளது

இதையடுத்து தகவலறிந்த 200-க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு அவன்மிது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages