நேரில் ஆஜராகுமாறு ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு - Agnipuratchi

நேரில் ஆஜராகுமாறு ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

Share This

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வெளிநாடுகளில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக வருமானவரித்துறை சார்பில் ப.சிதம்பரம் குடும்பத்தினரான சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதிகார்த்தி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எழும்பூர் நீதிமன்றம் ஏற்கனவே சம்மன் அனுப்பியும் இதுவரை அவர்கள் ஆஜராகவில்லை. இந்நிலையில் மூன்று பேரும் இன்று ஆஜராக ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து விலக்கு கேட்டு 3 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages