துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் மற்றும் பேரவை செயலருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் - Agnipuratchi

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் மற்றும் பேரவை செயலருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Share This

ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எடப்பாடி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். உள்பட 11 பேர் வாக்களித்தனர். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது⚖. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதுசபாநாயகர் தனபால், ஓ.பன்னீர்செல்வம், பேரவை செயலர் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages