சென்னை மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது - Agnipuratchi

சென்னை மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது

Share This

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் பேரில் போலி இணையதளம் மூலம் ஒன்றின் மூலம் வேலை வாங்கித்தருவதாக நூதன மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது மேலாளர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இணையதளத்தின் தோற்றத்தைக் காப்பியடித்து அதே போன்ற போல இணையதளம் www.cmrlco.org என்ற முகவரியில் உள்ளதாகக் கூறியிருந்தார். இதுகுறித்து காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு நடத்திய விசாரணையில், இளைஞர் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 
அவரை விசாரித்ததில் போலி இணையதளம் மூலம் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வாங்கித்தருவதாக விளம்பரங்கள் வெளியிட்டு, அதை நம்பி விண்ணப்பித்தவர்களிடமிருந்து பணம் வசூலித்து வந்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. கேரளாவில் கைதான இந்த இளைஞரின் பெயர் ஸ்ரீஜித், இவரை தற்போது போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில்⛓ அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages