நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை⚖ வழங்கினர். இந்நிலையில், கடந்த வாரம் அதிமுகவிற்கு பாதகமாக தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தர் வீட்டுக்கு வந்த மர்ம கடிதத்தில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலின்பேரில், சென்னை காவல் ஆணையரிடம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பேசியதாக சொல்லப்படுகிறது. அதன்படி, நீதிபதி எம்.சுந்தர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. மேலும், இது குறித்த தகுந்த நடவடிக்கையினை காவல்துறை சட்டப்படி மேற்கொள்ளும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
அதிமுகவினருக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்-தலைமை நீதிபதி கருத்து
அதிமுகவினருக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிக்கு கொலை மிரட்டல்-தலைமை நீதிபதி கருத்து
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment