ரஷ்ய அதிபர் புட்டின் உடனான சந்திப்புக்குப் பிறகு சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய அதிபர் டிரம்ப்புக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.  - Agnipuratchi

ரஷ்ய அதிபர் புட்டின் உடனான சந்திப்புக்குப் பிறகு சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய அதிபர் டிரம்ப்புக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. 

Share This

பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புட்டினும் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடவில்லை என புடின் கூறியதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார். அவரது இந்த விளக்கத்துக்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வெள்ளை மாளிகை முன்பு இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்றது. அமெரிக்காவில் சுதந்திரத்தை அதிபர் டிரம்ப் அடகுவைத்து விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

அதிபர் டிரம்பின் பேச்சுக்கு அவருடைய குடியரசுக்கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்து ள்ளது. அவருடைய பேச்சுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஆனால் அதிலிருந்து பல்டி அடித்து அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages