கடல் சீற்றம் குறைந்ததையடுத்து எட்டு நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர். - Agnipuratchi

கடல் சீற்றம் குறைந்ததையடுத்து எட்டு நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்.

Share This

வானிலை ஆய்வு நடுவம் விடுத்த கடல் சீற்ற எச்சரிக்கையை அடுத்து,மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எட்டு நாட்களுக்குப் பிறகு, பாக் நீரிணைப் பகுதியில் காற்றில் வேகம் குறைந்துள்ளதால், கடலுக்குச் செல்ல  அனுமதி வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை அடுத்தனர். இதனையடுத்து, மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்கச் சென்றனர். சிறிய அளவில் காற்று வீசினாலே கடலுக்கு செல்லவிடாமல் தடுக்கப்படுவதாக மீனவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.   

இதனிடையே, மீன்பிடித்தடைக் காலத்தைப் போன்று, மீன்பிடிக்க அனுமதிச்சீட்டு வழங்கப்படாத காலங்களிலும் நிவாரணம் வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதத்தில், பத்து நாட்கள் மட்டுமே கடலுக்கு செல்ல முடிவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.ள் இன்று கடலுக்கு சென்றனர்.

வானிலை ஆய்வு நடுவம் விடுத்த கடல் சீற்ற எச்சரிக்கையை அடுத்து,மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. எட்டு நாட்களுக்குப் பிறகு, பாக் நீரிணைப் பகுதியில் காற்றில் வேகம் குறைந்துள்ளதால், கடலுக்குச் செல்ல  அனுமதி வழங்குமாறு மீனவர்கள் கோரிக்கை அடுத்தனர். இதனையடுத்து, மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்கச் சென்றனர். சிறிய அளவில் காற்று வீசினாலே கடலுக்கு செல்லவிடாமல் தடுக்கப்படுவதாக மீனவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.   

இதனிடையே, மீன்பிடித்தடைக் காலத்தைப் போன்று, மீன்பிடிக்க அனுமதிச்சீட்டு வழங்கப்படாத காலங்களிலும் நிவாரணம் வழங்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்டம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதத்தில், பத்து நாட்கள் மட்டுமே கடலுக்கு செல்ல முடிவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages