தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறப்பது தொடர்பான ஏற்பாட்டை காவிரி ஒழுங்கா ற்றுக் குழு மேற்கொள்ளாததற்கு விவசாயிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். - Agnipuratchi

தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறப்பது தொடர்பான ஏற்பாட்டை காவிரி ஒழுங்கா ற்றுக் குழு மேற்கொள்ளாததற்கு விவசாயிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

Share This

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அடுத்து  நேற்று முன்நாள் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்குரிய 31 புள்ளி 25 டிஎம்சி தண்ணீரைத் திறப்பது தொடர்பான ஏற்பாடுகள் செய்யப்படாததற்கு காவிரிப் பாசன விவசாயி கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடக அணைகளில் நீர் நிரம்பியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், ஆனால் தமிழகத்துக்கு தண்ணீரைத் திறக்க ஏற் பாடு செய்யாமல், காவிரி ஆணையமும் ஒழுங்கா ற்றுக் குழுவும் வெறுமனே கூடிக் கலையும்  பொம்மை அமைப்புகள்தானா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

காவிரி உரிமையை மீட்டுவிட்டதாக வெற்றிவிழா கொண்டாடும் தமிழக ஆட்சியா ளர்கள், ஆணையம் பிறப்பித்த ஆணைப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் பெற்றுத் தருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேட் டுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages