ஆதார் எண் குறிப்பிடாமல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என வருமானவரித் துறை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கான விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. இதையடுத்து, 2018-19 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை ஆதார் எண் குறிப்பிடாமல் தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். ஆதார் அட்டையின் அரசியல் சாசன செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தால், அதன்பின், ஆதார் எண்ணை குறிப்பிட்டு திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆதார் எண் குறிப்பிடாமல் வருமான வரி தாக்கல்-சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment