ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கடந்த ஐந்தாம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது புதிய தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என இந்திய தூதரகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இலங்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு மீனவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இலங்கை நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையால் அந்த நாட்டு சிறையில் உள்ள மீனவர்கள் மீது புதிய தடை சட்டம் பாயும் ஆபத்து உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஒரு நிலை வந்தால் மீன்பிடி தொழிலை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment