நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பவானி உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வௌள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - Agnipuratchi

நீர்வரத்து அதிகரித்திருப்பதால் பவானி உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வௌள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு 3வது நாளாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  எனவே அந்த அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் 4வது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை தொடர்கிறது. பில்லூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பரளிக்காட்டில் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூழல் சுற்றுல்லா வரும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட 45 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 புள்ளி 3, 6 அடியாக அதிகரித்துள்ளது. இதேபோல மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்த னர். 

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்த போது பிரையண்ட் பூங்கா அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் மூன்று நகராட்சிக் கடைகள் மற்றும் எட்டு இருசக்கர ஊர்திகள் சேதமடைந்தன. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages