நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தொடங்கும் மழைகாலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 10-ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 18 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. மோடி அரசுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. மேலும் இக்கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
பிரதமர் வேண்டுகோள்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இக்கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் உறுதிபட கூறியுள்ளார். மேலும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என மோடி தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு பிரச்சினைகளால் முழுமையாக முடங்கியது.
No comments:
Post a Comment