மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியவுடன், மக்களவையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர், கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது முக்கிய பிரச்சனைகள் குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன், அனைத்துப் பிரச்சனைகள் குறித்தும் கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம் என்றார். அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், கேள்வி நேரம் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா, விவசாயிகள் தற்கொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துள்ள மோடி ஆட்சி மீது நம்பிக்கையில்லை என்றார். அதற்குப் பதிலளித்த சுமித்ரா மகாஜன், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். அரசுத் தரப்பிலும் விவாதிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் ஆந்திராவுக்கு சிறப்புத்தகுதி வழங்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நண்பகல் 12 மணி வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.
முன்னதாக மாநிலங்களவையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட னர்.
No comments:
Post a Comment