டெல்லியில் ஆட்சி நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநருக்கு முடிவெடுக்கும் தனி அதிகாரம் கிடையாது என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழ ங்கியது. இதையடுத்து அரசு உயரதிகாரிகள் பணிநியமனம் மற்றும் பணியிட மாற் றத்துக்கு ஒப்புதல் அளிக்க முதலமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் புதிய நடை முறையை டெல்லி மாநில அரசு வெளியிட்டது. ஆனால் கெஜ்ரிவால் அரசு பிறப் பித்த பணியிட மாற்ற ஆணைகளை உயரதிகாரிகள் பின்பற்ற மறுத்துள்ளனர். இதையடுத்து துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், அரசு அதிகா ரிகள் தொடர்பான சேவைத் துறை விவகாரத்தில் மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்க துணைநிலை ஆளுநர் மறுப்பதாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் டெல்லியில் மாநில அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் நீடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment