சுங்கச்சாவடி கட்டணம், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள், கடந்த 20ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. வெளிமாநிலங்களுக்கு இரும்பு, ராணுவ வாகனங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை ஏற்றி செல்லும் 7 ஆயிரம் ட்ரெய்லர் லாரிகளும், இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. இதனையடுத்து, லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு சார்பில் சாலை போக்குவரத்துதுறை செயலாளர் மலிக் பேச்சு நடத்தினார். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 5 நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து கடந்த 20-ம் தேதி முதல் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவிற்கு வந்தது லாரி ஸ்ட்ரைக்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment