மத நடவடிக்கைகள் குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். - Agnipuratchi

மத நடவடிக்கைகள் குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்.

Share This

மதச் சார்பின்மை கொள்கையுடைய இந்தியாவில் அரசு நிலத்தில் மதம் சார்ந்த நட வடிக்கைகளுக்கு அனுமதியளிக்கலாமா என்பது குறித்த வழக்கை உச்சநீதிமன்ற த்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கவுள்ளது.

டெல்லியில் உள்ள பூங்கா ஒன்றில் மதம் சார்ந்த விழாவை நடத்த ஜோதி ஜக்ரன் மண்டல் என்ற அமைப்புக்கு மாநகராட்சி நிர்வாகமும் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் அனுமதி மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் நாரிமன் மற்றும் இந்து மல்கோத்ரா அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. மதச் சார்பற்ற நாடான இந்தியாவில் அரசு நிலம் மற்றும் பொதுச் சொத்துக்களில் மத நடவடிக்கைகளுக்கும் மத விழாக்களுக்கும் அனுமதியளிக் கலாமா கூடாதா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது மிக முக்கியமான பிரச்சனை என தெரிவித்தது. எனவே இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற அமர்வு பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages