நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது. 1000 கனஅடி திறப்பு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்இருப்பு 73.13 டிஎம்சியாக உள்ளது. இந்நிலையில் காலை 10.35 மணியளவில் 85-வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்து விட்டார். ஆரம்பத்தில் 2,000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 20 ஆயிரம் கனஅடி வீதம் நீர் திறந்து விடப்படும். நீர் திறப்பால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேட்டூர், கொளத்தூர் வழியாக மாதேஸ்வரன் மலை செல்லும் வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பொறுப்பு வகிப்பவர், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment