இந்திய வானிலை ஆய்வு மையம்
ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேதிகளில் மிகமிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேராளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை நேற்று காலை முதல் குறைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது. இதனிடையே இன்று காலை வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் தற்போது பெய்து வரும் மழையின் வலு இழக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் மழையில் வலு குறைந்தாலும், பருவமழை காலங்களில் வலுப்பெறும் மேற்கு திசை காற்றின் காரணமாக வருகின்ற 13 முதல் 15ம் தேதி வரை மீண்டும் மழை வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் மேற்கு பருவமழை காலங்களில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் போது அது பருவகாற்றை வலுவடைய செய்யும். அதன் அடிப்படையில் வரும் 13 ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அதன் காரணமாக மீண்டும் கேரளா, கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment