சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில் ரமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் தஹில் ரமணியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், தஹில் ரமணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கடந்த 1990-ஆம் ஆண்டு, மகாராஷ்டிர மாநில அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட தஹில் ரமணி, 2001-ஆம் ஆண்டில் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment