சென்னை -ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் - Agnipuratchi

சென்னை -ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

Share This

கோயம்பேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கண்டெய்னர் லாரியை போலீசார் சோதனை நடத்தியுள்ளார்கள். அப்போது, அதில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து, கண்டெய்னர் லாரி அருகிலேயே மற்றொரு சரக்கு வேனை கண்ட போலீசார், அதையும் ஆய்வு செய்தபோது, அதிலும் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, இரு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் என்ற முன்னாராம், விருத்தாசலத்தைச் சேர்ந்த அன்வர், தாம்பரத்தைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பெங்களூரில் இருந்து சென்னை கடத்தி வரப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages