கலைஞர் கருணாநிதி மீதான வழக்குகள் ரத்து செய்யகோரிய மனு குறித்து நீதிமன்றம் - Agnipuratchi

கலைஞர் கருணாநிதி மீதான வழக்குகள் ரத்து செய்யகோரிய மனு குறித்து நீதிமன்றம்

Share This

தமிழக அரசு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி மீது அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கலைஞர் மீது 13 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 7ஆம் தேதி கலைஞர் காலமானதை அடுத்து, அவர் மீதான அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு, திமுக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, கலைஞரின் இறப்புச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி சுபாதேவி, வழக்குகளை ரத்து செய்வது குறித்த அரசாணையை தமிழக அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், விசாரணையை அக்டோபர் முதல் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages